தமிழர் பகுதியில் நடந்த மாபெரும் பாரம்பரிய படகோட்டப் போட்டி
தைப் பொங்கல் தினத்தையொட்டி கிண்ணியா பாலத்தருகில் மாபெரும் பாரம்பரிய படகோட்டப் போட்டி இன்று (06)மாலை இடம் பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுனர் செயலகம் ஏற்பாடு செய்த குறித்த போட்டியை கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்தார்.
கிண்ணியா துறையடி கடற் பகுதியில் இருந்து கிண்ணியா பூங்க வரை கடல் வழியாக இப் படகோட்டப் போட்டி இடம் பெற்றது.
பாரம்பரிய படகோட்டப் போட்டி
பாரம்பரிய விளையாட்டின் ஒரு பகுதியாக படகோட்டப் போட்டி இடம் பெற்றமை வரவேற்கத்தக்க ஒன்றாக காணப்படுகிறது.
இப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்காக முதலாம் பரிசாக ரூபா 100000,இரண்டாம் பரிசாக ரூபா 50000,மூன்றாம் பரிசாக ரூபா 25000 என வழங்கப்பட்டன.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக்,ஏ.எல்.எம்.அதாவுள்ளா,கபில நுவன் அதுகோரள,இந்திய உயர்ஸ்தானிகர் ஆலய துணைத் தூதுவர் வெங்கடேஷ் உட்பட மாகாண திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், திருகோணமலை சம்பூர் பகுதியில் பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதில் ஒரு பகுதியாக இன்று ஜல்லிக்கட்டு போட்டியும் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
|