வரலாற்றை மாற்றி அமைத்த படகுச் சம்பவம்

Sri Lanka Army Rajiv Gandhi India Liberation Tigers of Tamil Eelam Indian Peace Keeping Force
By Niraj David Jan 06, 2024 01:41 PM GMT
Niraj David

Niraj David

in சமூகம்
Report

விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவிற்கும் இடையில் இருந்து வந்த பூசல்கள் வெளிப்படையாக வெடிப்பதற்கும், இந்தியா தனது சரித்திரத்தில் என்றுமே மறக்கமுடியாத ஒரு அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் காரணமாக இருந்த சம்பவம் என்று சரித்திரவியலாளர்களால் குறிப்பிடப்படுகின்ற அந்தப் ‘படகுச் சம்பவம்', உண்மையிலேயே இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் தான் நடைபெற்றிருந்தது.

குமரப்பா, புலேந்திரன் உட்பட 17 விடுதலைப் புலிகள் சிறிலங்காவின் கடற்படையால் கைதுசெய்யப்படுவதற்கும், இறுதியில் அவர்கள் மரணத்தைத் தழுவிக் கொள்வதற்கும், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி, அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன போன்றவர்களே காரணமென்று என்னதான் குற்றம் சுமத்தினாலும், அடிப்படையில் இந்தச் சம்பவம் தொடர்பான அத்தனை அசம்பாவிதங்களுக்கும் இந்தியத் தரப்பினரே பிரதான காரணமாக இருந்துள்ளார்கள் என்பதுதான் உண்மை.

முதலாவதாக 3.10.1987ம் திகதியில் பருத்தித்துறைக் கடலில் புலிகளின் படகொன்று ஆயுதங்களைக் கடத்துவதாக சிறிலங்காவின் கடற்படையினருக்கு இந்தியாவே தகவலை வழங்கியிருந்தது.

வரலாற்றை மாற்றி அமைத்த படகுச் சம்பவம் | India Srilanka Agrement Ltte Leader Jr Jayawardana

சிறிலங்கா கடற்படை கைப்பற்றிய படகில் இருந்த விடுதலைப் புலி தளபதிகள் தமது சொந்தப் பாதுகாப்புக்குத் தேவையான சிறிய ஆயுதங்களைத் தவிர, வேறு ஆயுதங்கள் எதுவும் அந்தப் படகில் கடத்தப்படவில்லை என்பதை இந்தியா வெளியிடவும் இல்லை, அதைக் காரணம் காண்பித்து கைதான புலிகளை விடுவிக்க முயற்சிக்கவும் இல்லை.

கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை கொழும்புக்கு கொண்டு செல்லும் சிறிலங்காப் படைகளின் முயற்சிகளை இந்தியா தனது இராஜதந்திர அழுத்தங்களை பிரயோகித்தோ அல்லது தனது படைபலத்தைப் பயன்படுத்தியோ இலகுவாகத் தடுத்திருக்கமுடியும்.

ஆனால் இந்தியா அதனைத் செய்வதில் அக்கறை காண்பிக்கவில்லை.  இந்தியாவின் இந்தச் செய்கையானது, இந்தியாவை நம்பி தமது ஆயுதங்களை ஒப்படைத்திருந்த விடுதலைப் புலிகளுக்கு இந்தியா இழைத்த மிகப் பெரிய துரோகம் என்றே கூறவேண்டும்.

இந்தியப்படை அதிகாரியின் ஆதங்கம்

சிறிலங்காப் படைகளின் காவலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளை விடுவிப்பதில், இந்தியப் படையினருக்கு இடையேயும், இந்திய அதிகாரிகளுக்கு இடையேயும் பாரிய குழறுபடிகள் காணப்பட்ட விடயம் பின்நாட்களிலேயே வெளிவந்தன.

விடுதலைப் புலிகளுக்கு ஒரு பாடம் படிப்பிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் செயற்பட்ட சில இந்திய அதிகாரிகளும், இத்தியாவின் அரசியல் உயர் மட்டமும், புலிகள் கைதுசெய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டுசெல்லப்பட இருந்த அந்தச் சந்தர்ப்பத்தை ஒருவகையில் தமது எண்ணங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தலைப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

இலங்கைக்கு வந்த இந்திய அமைதிகாக்கும் படைக்கு முதன்முதலாக தலைமை தாங்கிவந்தவர், இந்தியப்படை உயரதிகாரி மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் . இந்தப் படகுச் சம்பவத்தில் நேரடியாக பங்குபற்றியவரும் அவரே. இராணுவ சேவையில் இருந்து அவர் இளைப்பாறிய பின்னர், ஜோசி ஜோசப் என்ற பிரபல இந்திய ஊடகவியலாளருக்கு அவர் ஒரு செவ்வியை வழங்கியிருந்தார்.

வரலாற்றை மாற்றி அமைத்த படகுச் சம்பவம் | India Srilanka Agrement Ltte Leader Jr Jayawardana

அந்தச் செவ்வியில், புலேந்திரன், குமரப்பா போன்றவர்களின் மரணம் தொடர்பாக, இந்தியா கடைப்பிடித்திருந்த அனுகுமுறைகள் பற்றி வெளிப்படுத்தியிருந்தார். இணையத் தளம் ஒன்றில் வெளியான அவரது செவ்வி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

குறிப்பிட்ட அந்தப் படகுச் சம்பவத்தில் இந்தியா விட்ட தவறுகள் பல அவரது செவ்வியில் வெளிவந்தன. இந்தியாவின் உண்மையான முகத்தையும், ஈழத்தமிழருக்கு எதிராக இந்தியா செய்த துரோகங்களையும் வெளிப்படுத்துவதாக அந்தச் செவ்வி அமைந்திருந்தது.

அவர் தனது செவ்வியில் இவ்வாறு தெரிவித்திருந்தார்: “என்னைச் சந்தித்த மாத்தையா ஒரு விடயத்தை உறுதியாகத் தெரிவித்தார்.

ஜெனரல், எப்படியென்றாலும் சிறிலங்காப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள எமது உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். என்ன விலை கொடுத்தாவது அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். இந்திய அமைதிகாக்கும் படை எங்களை காப்பாற்றுவதற்காகவே இங்கு வந்துள்ளது.

சிறிலங்காவின் துருப்புக்கள் 

எனவே எமது உறுப்பினர் கொழும்பு கொண்டு செல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தும் தார்மீகக் கடமை இந்தியப்படைகளுக்கே உள்ளது.

கொழும்புக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டால் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவார்கள் என்று மாத்தையா என்னிடம் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் அந்த இடத்தில் நல்லதொரு தமாஷ் நிலைமை காணப்பட்டது. கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அவர்களைச் சூழ இந்தியப்படைகள் அவர்களைச் சூழ்ந்து சிறிலங்காப் படைகள்ள மீண்டும் சிறிலங்காப் படைகளைச் சூழ இந்தியப்படைகள்ள இவை அனைவரையும் சூழ சிறிலங்கா இராணுவத்தின் கவச வாகனங்கள். இந்த இடத்தில் சிறிலங்காப் படைகளுக்கும், இந்தியப் படைகளுக்கும் இடையில் ஒரு சண்டை மூழுவதற்கான ஏதுநிலையும் உருவாகி இருந்தது.

வரலாற்றை மாற்றி அமைத்த படகுச் சம்பவம் | India Srilanka Agrement Ltte Leader Jr Jayawardana

சிறிலங்கா படைகளுக்கு பொறுப்பாக இருந்த பிரிகேட் கொமாண்டருக்கு கடுமையான உத்தரவு அவரது மேலிடத்தினால் வழங்கப்பட்டிருந்தது. கைதிகளை கொழும்புக்கு அழைத்துவர முடியாவிட்டால் அந்த அதிகாரியை வேலையை ராஜினாமாச் செய்துவிட்டு கொழும்புக்கு திரும்பும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை எனக்கும் எனது மேலிடத்தினால் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. திருகோணமலைக்குச் சென்று மேலதிகமான சிறிலங்காவின் துருப்புக்கள் யாழ்பாணத்திற்கு அனுப்பப்படுவதைத் தடுக்கும்படி எனக்கு பணிப்புரை கிடைத்திருந்தது.

அதன்படி நான் திருகோணமலையை அடைந்து திருகோணமலை விமான நிலையத்தையும், கட்டுப்பாட்டுக் கோபுரத்தையும் எமது கொமாண்டோக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தோம்.

இது சிறிலங்கா படையினருக்கும் எங்களுக்கும் இடையிலான வேற்றுமை உணர்வை மேலும் அதிகரிக்கும்படியாக இருந்தது. இந்த நேரத்தில் விடுமுறையில் புதுடில்லி சென்றிருந்த இந்தியத் தூதுவர் தீட்சித், உடனடியாக கொழும்பு திரும்பி, கைதுசெய்யப்பட்டிருந்த விடுதலைப் புலி உறுப்பினர்களது விடுதலை விடயத்தில் நடவடிக்கை எடுக்கும்படி கோரி இருந்தேன். திபீந்தர் சிங்  கொழும்புக்குச் சென்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.

ஆனாலும் இதுபோன்றதொரு விடயத்தைக் கையாளும் அளவிற்கு அவர் ஒரு உறுதியான மனிதர் கிடையாது என்பது எனக்குத் தெரியும். நான் திருகோணமலை விமானத் தளத்தை பாதுகாக்கும் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன்.

கைதுசெய்யப்பட்ட புலி உறுப்பினர்களை விமானத்தின் மூலம் கொழும்புக்குக் கொண்டு செல்ல இருப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக எமது படைகள் யாழ் விமானப் பாதையிலும் நிலைகொண்டிருந்தார்கள்.

திபீந்தர் சிங், தீட்சித் உடன் வேறு சில உயரதிகாரிகளும் திருகோணமலை விமானத்தளத்தில் வந்திறங்கினார்கள். அவர்களால் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவை சமாளிக்கமுடியவில்லை என்ற விடயத்தை என்னிடம் தெரிவித்தார்கள்.

திபீந்தர் சிங்கின் உத்தரவு

அவர்களுடன் ஒப்பிடும் போது ஜெயவர்த்தனா மிகவும் கெட்டிக்காரராகவே இருந்தார். மறுநாள் அங்கு வந்த திபீந்தர் சிங் எனக்கு ஒரு உத்தரவை பிறப்பித்தார். “புலிகளை இலங்கைப் படையினரிடம் ஒப்படைத்துவிடுங்கள்.

அவர்கள் விரும்பிய எதனையாவது செய்து கொள்ளட்டும். தற்பொழுது நாங்கள் சிறிலங்கா அதிகாரிகள் சிலருடன் சென்று தேனீர் அருந்தலாம் என்று என்னை அழைத்தார்.

அவ்வாறே அந்த சிறிலங்காவின் படைத்தளபதிகளுடன் சென்று நாங்கள் தேனீர் அருந்தினோம். 2 மணியளவில் புது டில்லியில் இருந்து எனக்கு ஒரு செய்தி கிடைத்தது.

அமைதிகாக்கும் படை அதிகாரி எதற்காக சிறிலங்காவின் அரசியல் யாப்பு தொடர்பான விடயங்களில் தலையிட்டுக்கொண்டிருக்கின்றார்?| என்று அந்தச் செய்தியில் கேட்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து மெட்ராஸில் உள்ள எமது தலைமைக் காரியாலயத்தில் இருந்து எனக்கு மற்றொரு உத்தரவு வந்தது. யாழ்ப்பானத்தில் கைதிகள் விடயத்தில் நீங்கள் மேற்கொண்டுள்ள முற்றுகையை விலக்கிக் கொள்ளுங்கள்.

சிறிலங்காப் படைகள் அவர்கள் இஷ்டப்படி எதைவேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும்.என்பதே அந்த உத்தரவு. எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. நான் திருகோண மலையில் இருந்தேன். எனது சக அதிகாரிகள் அனைவரும் யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள். அங்கு கைதுசெய்யப்பட்ட நிலையில் இருந்த புலி உறுப்பினர்களைக் காப்பாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாம் ஏற்கனவே செய்திருந்தோம்.

குமரப்பா, புலேந்திரன் இருவருமே எனக்கு நன்கு பரிட்சயமானவர்கள். புலேந்திரன் பலதடவைகள் என்னை தனது வாகனத்தில் அழைத்துச்சென்று யாழ்பாணத்தை சுற்றிக்காண்பித்திருந்தார்.

வரலாற்றை மாற்றி அமைத்த படகுச் சம்பவம் | India Srilanka Agrement Ltte Leader Jr Jayawardana

மிகவும் அன்புடன் பழகக்கூடியவர். இவர்கள் கைதுசெய்யப்பட்டு இந்தியப்படையினரின் பாதுகாப்புடன் இருக்கும் போது என்னைச் சந்தித்த பிரிகேடியர் செனிவரட்ன, புலேந்திரனை மட்டுமாவது தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டிருந்தார்.

கொலைக் குற்றச்சாட்டுகளுக்காக புலேந்திரன் சிறிலங்காப் படையினரால் மிகவும் வேண்டப்பட்ட நபர். அதற்கு நான் செனிவரெட்னவிடம், “புலேந்திரனை உங்களிடம் ஒப்படைக்க முடியாது. புலேந்திரனை நான் விரைவில் எனது ஜீப்பில் எனது அருகில் அமர்த்தி அழைத்துச் செல்வதை நீங்கள் பார்ப்பீர்கள் என்று தெரிவித்திருந்தேன்.

தீட்சித்தின் ஆணவம்

ஆனால் எனது தலைமைக் கரியாலயத்தில் இருந்து எனக்குக் கிடைக்கப்பெற்ற உத்தரவு என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைத்தது. இறுதியில் எனக்கு மேலிடத்தில் இருந்து கிடைத்த உத்தரவுப்படி நாங்கள் எங்கள் படைகள் அனைத்தையும் விலக்கினோம்.

தமது கடமைகளை சிறிலங்கா படையினர் பொறுப்பேற்றுக்கொண்டார்கள். அதனைத் தொடர்ந்தே புலிகள் சயனைட்டை உட்கொண்டார்கள். இந்தியாவிற்கும் புலிகளுக்கும் இடையேயான புரிந்துணர்வில் மிகவும் பிளவை ஏற்படுத்திய சம்பவமாக இது மாறி இருந்தது.

அமைதிகாக்கவெனச் சென்ற எம்மால் அநியாயமாகப் பறிக்கப்பட்ட அந்த இளம் உயிர்களைக் காப்பாற்றமுடியாமல் போயிருந்தது. அதற்கு தீட்சித்  முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் அந்த புலி உறுப்பினர்களைக் காப்பாற்றுவது ஒரு பெரிய விடயமாக இருக்கவில்லை.

வரலாற்றை மாற்றி அமைத்த படகுச் சம்பவம் | India Srilanka Agrement Ltte Leader Jr Jayawardana

சில கவச வாகனங்களை வைத்தே அந்தப் போராளிகளை என்னால் மீட்டிருக்க முடியும். சிறிலங்காப் படைகளால் அதனைப் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்திருக்க முடியாது.

இத்தனை பிரச்சினைகள் ஏற்படாமல் அந்த நிலமையை சுமுகமாக்கி இருக்கமுடியும். ஆனால் அதனைச் செய்வதற்கு எனக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கான முழுப் பொறுப்பையும், இந்திய இராஜதந்திரிகளும், இந்திய இராணுவத் தலைமையகமுமே ஏற்கவேண்டும். குறிப்பாக இந்தியத் தூதுவர் தீட்சித்தே இந்த அனர்த்தத்திற்குப் பிரதான காரணம் என்று நான் கூறுவேன்.

இலங்கைப் பிரச்சினையில் ராஜீவ் காந்தியை வழி நடத்தியவர் தீட்சித்தான். அவர் நினைத்திருந்தால் நிச்சயம் இந்தப் போராளிகளைக் காப்பாற்றி அனர்த்தங்களைத் தடுத்திருக்கமுடியும். அவரது ஆணவமே அனைத்தும் அனர்த்தமாக மாறக் காரணமாக அமைந்திருந்தது.

இவ்வாறு இந்தியப்படை உயரதிகாரி மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் தனது செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

புதுமணத் தம்பதிகள் சந்தித்த சோதனைகள்

புதுமணத் தம்பதிகள் சந்தித்த சோதனைகள்

அத்துலத் முதலியின் உத்தரவு

அத்துலத் முதலியின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025