அத்துலத் முதலியின் உத்தரவு

Sri Lanka LTTE Leader India Liberation Tigers of Tamil Eelam Indian Peace Keeping Force
By Niraj David Jan 04, 2024 10:10 AM GMT
Niraj David

Niraj David

in சமூகம்
Report

சிறிலங்காக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 விடுதலைப் புலிப் போராளிகளையும், உடனடியாகவே பிரத்தியோக விமானத்தின் மூலம் கொழும்பிற்கு அனுப்பி வைக்கும்படி, பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்னவிற்கு கொழும்பில் இருந்து உத்தரவிடப்பட்டது.

அப்பொழுது சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலியே இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார். அப்பொழுது இந்திய- இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக தென் பகுதியில் ஜே.வி.பி.இனரால் மேற்கொள்ளப்பட்டு வந்த பாரிய பிரச்சாரத்தை முறியடிப்பதற்கு ஏதுவாக, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள அத்துலத் முதலி எண்ணியிருந்தார்.

கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை கொழும்புக்கு கொண்டு வந்து, தொலைக்காட்சி முன்பு அவர்களை தோன்றவைத்து மலிவான ஒரு பிரச்சாரத்தை தேடிக்கொள்ளும் திட்டத்திலேயே லலித் அத்துலத் முதலி இவ்வாறாக ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தார். அக்காலத்தில் லலித் அத்துலத் முதலிக்கு சிங்கள மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருந்தது.

அதுவும் சிறிலங்கா இராணுவத்தினர் வடமாராட்சியில் மேற்கொண்ட வெற்றிகரமான இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, லலித் அத்துலத் முதலி சிங்கள மக்களின் ஒரு கதாநாயகனாகவே வலம்வந்தார்.

அத்துலத் முதலியின் உத்தரவு | Athul Mudali S Order Srilnaka India Ltte Prabakara

இந்தியப்படைகளின் வருகையைத் தொடர்ந்தே, லலித் அத்துலத் முதலியின் மவுசு குறைய ஆரம்பித்திருந்தது. ஜே.வி.பியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், லலித், ஜே.ஆர். போன்றவர்களை கையாலாகாதவர்கள் என்று விமர்சித்து பிரச்சாரம் செய்தும் வந்ததால், விடுதலைப் புலி முக்கியஸ்தர்கள் சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தமது அந்தஸ்தை சிங்கள மக்கள் முன்பு உயர்திக்கொள்ள அவர் தீர்மானித்திருந்தார்.

அதேவேளை, இந்தியாவையும், புலிகளையும் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்திக் கொள்வது ஜே.ஆர். இன் திட்டமாக இருந்தது. அதனால் இந்தப் பிரச்சனையை லலித் அத்துலத் முதலியின் போக்கிலேயே விட்டுவிடும் முடிவுக்கு ஜே.ஆர். வந்திருந்தார்.

கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை உடனடியாக கொழும்புக்கு அனுப்பிவைக்கும்படி கடுமையான உத்தரவொன்றை லலித் அத்துலத் முதலி, பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்னவிற்கு அனுப்பிவைத்திருந்தார்.

புலிகள் அதிர்ச்சி

கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை கொழும்புக்கு கொண்டு செல்லும் சிறிலங்கா இராணுவத்தினரது திட்டம் வெளியானதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளின் தலைமை அதிர்ச்சி அடைந்தது.

மிகுந்த கோபமும் அடைந்தது. காங்கேசன்துறை மற்றும் பலாலியில் நிலைகொண்டிருந்த இந்தியப் படையினருக்கு பொறுப்பாக இருந்த இந்தியப் படை உயர் அதிகாரியான ஜெனரல் ரொட்ரிகஸ் அவர்களைச் சந்தித்த விடுதலைப் புலித் தலைவர்கள், சிறிலங்கா படையினால் கைது செய்யப்பட்டுள்ள தமது உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு இந்தியப் படைகளே பொறுப்பு என்று தெரிவித்தார்கள்.

சிறிலங்கா இராணுவத்தினரின் இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக தமது கடுமையான கண்டனத்தையும் தெரிவித்தார்கள். அப்பொழுது இந்தியாவின் இராஜதந்திரிகள் புலிகளுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும், இந்தியப் படையின் சில அதிகாரிகள் புலிகள் மீது ஓரளவு அனுதாபம் கொண்டவர்களாகவே காணப்பட்டார்கள்.

அத்துலத் முதலியின் உத்தரவு | Athul Mudali S Order Srilnaka India Ltte Prabakara

பல அதிகாரிகள் புலி உறுப்பினர்களுடன் மிகவும் நெருக்கமான நட்பைக் கொண்டிருந்தார்கள். சில அதிகாரிகள் விடுதலைப்புலி தலைவர்களினது திருமணங்களில் கலந்து கொள்ளும் அளவிற்கு புலிகளுடன் நட்புப் பாராட்டி வந்தார்கள். ஜெனரல் ரொட்ரிக்கஸும், அப்படியான அதிகாரிகளில் ஒருவர்.

புலிகள் மீது ஓரளவு அன்பும், அனுதாபமும் கொண்டவர். கைது செய்யப்பட்டு,சிறிலங்கா இராணுவத்தினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலி முக்கியஸ்தர்களை மீட்டுவருவேன் என்று கூறி புறப்பட்டார். சிறிலங்கா இராணுவ முகாமிற்குப் பொறுப்பாக இருந்த பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்னவைச் சந்தித்த இந்தியப் படை அதிகாரி, கைது செய்யப்பட்ட புலிகளை இந்தியப் படையிடம் கையளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஏற்கனவே அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டினார். அதற்குப் பதிலளித்த பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்ன, ஏற்கனவே புரிந்திருந்த குற்றச் செயல்களுக்கே பொது மன்னிப்பு வழங்கப்பட்டது என்றும், புதிதாக இவர்கள் புரிந்துள்ள ஆயுதக் கடத்தல் குற்றத்திற்கு அந்தப் பொது மன்னிப்பு செல்லுபடியாகாது என்றும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலி முக்கியஸ்தர்களை கொழும்புக்கு கொண்டு செல்வதால் ஏற்படப்போகும் விளைவுகள் பற்றி எடுத்துரைத்த ரொட்ரிகஸ், இதனை எப்படியாவது தடுத்துமாறு சிறிலங்கா படை அதிகாரியை கேட்டுக்கொண்டார்.

அதற்கு பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்ன, தான் ஒரு இராணுவ அதிகாரி என்றும் தனக்கு இடப்படும் கட்டளைகளுக்கு கீழ்படிவதே தனது கடமை என்றும் தெரிவித்து, அவருக்கு கொழும்பில் இருந்து கிடைக்கப்பட்டிருந்த கடுமையான உத்தரவு பற்றியும் தெரிவித்தார்.

இறுதி உத்தரவு

இந்த இரண்டு அதிகாரிகளிடையேயும் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக, புலிகள்-இந்திய யுத்தம் பற்றி பின்நாட்களில் ஆய்வுகள் மேற்கொண்ட சுஜீஸ்வர சேனாதீர என்ற சிங்கள எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் படை அதிகாரி ரொட்ரிகஸ் இற்கும் சிறிலங்காப் படை அதிகாரி பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்னவிற்கும் இடையில் மிகவும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் பரிமாறப்பட்டன.

ஒரு சந்தர்ப்பத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இந்தியப் படை அதிகாரி இவ்வாறு தெரிவித்திருந்தார்: ‘நான் விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் உங்களது விமானம் செல்வதற்கு அனுமதிக்கமாட்டேன். இந்தியப்படையின் கவச வாகனங்களை விமான ஓடு தளத்தில் நிறுத்திவைப்பேன் என்று எச்சரித்தார்.

அதற்கு பதிலளித்த பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்ன, ‘அப்படி நீங்கள் நடந்துகொண்டால், அந்த கவசவாகனங்கள் மீது தாக்குதல் நடத்தும்படி நான் எனது படைவீரர்களுக்கு உத்தரவிடவேண்டி இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

அத்துலத் முதலியின் உத்தரவு | Athul Mudali S Order Srilnaka India Ltte Prabakara

இறுதியில், தனது குரலை தாழ்த்திய இந்திய அதிகாரி ரொட்ரிகஸ், ஒரு வேண்டுகோளை வினயமாக விடுத்தார். புலி உறுப்பினர்களை விமானத்தில் ஏற்றி அனுப்புவதை 12 மணி நேரம் தாமதிக்கும்படியும், புதுடில்லியில் இருக்கும் இந்தியத் தூதர் தீட்ஷித் மறுநாள் கொழும்பு வந்ததும், இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கண்டுவிடலாம் என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்ன கொழும்பை மீண்டும் தொடர்பு கொண்டு, நிலமையை விளக்கினார். கொழும்பில் இருந்து உறுதியான ஒரு பதில் வந்தது.

“இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் கைதிகளை விமானத்தில் ஏற்றி அனுப்புவதற்கு உங்களால் முடியாவிட்டால், உங்களது பொறுப்புக்களை உங்களுக்கு அடுத்ததாக உள்ள அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு, கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்புக்கு வந்து சேருங்கள் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் ஒரு இரத்த ஆறு ஓடுவதற்கு அந்த உத்தரவு காரணமாக இருந்தது.

படகில் வந்த புலிகள்

படகில் வந்த புலிகள்

ஜே.ஆரின் தந்திரம்

ஜே.ஆரின் தந்திரம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மாதகல், சுண்டிக்குளி, Nigeria, Toronto, Canada

25 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

08 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி வடக்கு, Nürnberg, Germany

23 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Berlin, Germany

16 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், Munchen, Germany

15 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம்

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Jun, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

12 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, Nienburg, Germany

24 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

24 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சுன்னாகம், யாழ்ப்பாணம், London, United Kingdom

19 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்

கம்பர்மலை, London, United Kingdom

12 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020