தமிழகத்தில் தவெக ஆட்சியிலும் தொடரும் மாணவர் திட்டங்கள்
தமிழகத்தில் செயற்படுத்தப்பட்டு வரும் தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்கள், புதிய தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் செயற்படுத்தப்படும் இந்தத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் மாதாந்த உதவித்தொகையாக 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச பாடசாலைகளில் கல்வி கற்று உயர் கல்வியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு பொருளாதார ஆதரவாக இந்தத் திட்டங்கள் செயற்பட்டு வருகின்றன.
உயர்கல்வியைத் தொடரும் மாணவர்கள்
இதன் மூலம் உயர்கல்வியைத் தொடரும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருவதுடன், கல்வி இடைவிலகல் குறைவதற்கும் உதவியாக இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிதி செலுத்தப்பட்டுள்ளதால், பயனாளிகள் தங்களின் கணக்கு விபரங்களை சரிபார்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |