புதிய 2000 ரூபாய் நாணயத்தாள் அறிமுகம் - மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு
2000 ரூபாய் நாணயத்தாளை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு மத்திய வங்கி அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) அதன் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2025 ஒகஸ்ட் 29 ஆம் திகதி 2000 ரூபாய் புழக்கத்திற்கு விடப்படும் ஞாபகார்த்த நாணயத்தாளை வெளியிட்டது.
புதிய நாணயத் தாளை தங்குதடையின்றி ஏற்றுக்கொள்வதையும் விநியோகிப்பதையும் வசதிப்படுத்தும் பொருட்டு, உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் அவற்றின் பணம் கையாளும் இயந்திரங்களை அளவமைக்கும் செயன்முறையை முன்னெடுக்கின்றன.
பொதுமக்களின் புழக்கத்திற்கு விடப்படும்
இச்செயன்முறையின் முன்னேற்றத்துக்கு ஏற்ப, புதிய நாணயத்தாள் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் ஊடாக படிப்படியாக பொதுமக்களின் புழக்கத்திற்கு விடப்படும்.
குறித்த நாணயத் தாள் பரிமாற்றப்படுகின்ற இக்காலப்பகுதியில் பொதுமக்களின் ஒத்துழைப்பை இலங்கை மத்திய வங்கி மெச்சுகின்றது.
அத்துடன் அளவமைக்கும் செயன்முறை நிறைவடைந்தவுடன் புதிய நாணயத்தாள் அனைத்து வங்கிகள் மூலமும் தங்குதடையின்றி பயன்படுத்தப்படும் எனவும் இலங்கை மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
