22.5 மில்லியன் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்...! இளைஞர் கைது

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Shalini Balachandran Oct 03, 2026 04:08 PM GMT
Report

கிரிண்டிவல பகுதியில் ரூபாய் 22.5 மில்லியன் பெறுமதியான ஐஸ்போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா காவல்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர்.

கனேமுல்ல காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இப்போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் பிள்ளைகளை பாதித்த விடயம் : அவரே வெளியிட்ட தகவல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் பிள்ளைகளை பாதித்த விடயம் : அவரே வெளியிட்ட தகவல்

மேலதிக விசாரணை

போதைப்பொருளுடன் சேர்த்து சந்தேகநபர் வாடகைக்குத் தங்கியிருந்த வீட்டிலிருந்து இரண்டு இலத்திரனியல் தராசுகள் மற்றும் இரண்டு கைபேசிகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சில நாட்களுக்கு முன்னர் கனேமுல்ல பகுதியில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளில் கிடைத்த தகவலின் அடிப்படையில், கிரிண்டிவல - திக்கந்தவத்தை பகுதியில் அமைந்துள்ள குறித்த வீடு சோதனையிடப்பட்டது.

22.5 மில்லியன் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்...! இளைஞர் கைது | Rs 22 5M Crystal Meth Seized In Kirindiwela

இந்தநிலையில் சந்தேகநபர் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே கிரிண்டிவலவில் வீடொன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்துள்ளார் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தற்போது டுபாயில் (Dubai) தலைமறைவாக உள்ள மினுவாங்கொடையைச் சேர்ந்த பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவராலேயே இந்த போதைப்பொருள் தனக்கு விநியோகிக்கப்பட்டதாக சந்தேகநபர் விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காகக் கிரிண்டிவல காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

விரைவில் முடிவிற்கு வரப்போகும் ஈரான் போர் : ட்ரம்ப் நம்பிக்கை

விரைவில் முடிவிற்கு வரப்போகும் ஈரான் போர் : ட்ரம்ப் நம்பிக்கை

சற்று முன் கைது செய்யப்பட்ட ஞானசார தேரர்

சற்று முன் கைது செய்யப்பட்ட ஞானசார தேரர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016