தேரரின் கணக்கிலிருந்து மாயமான மில்லியன் கணக்கான பணம்! அதிரடியாக கைதான நால்வர்
பாணந்துறையில் உள்ள ஒரு பிரபலமான விகாரையொன்றின் விகாரபதியான தேரர் ஒருவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 28 மில்லியனுக்கும் அதிகமான தொதை மோசடி செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களை பாணந்துறை பிரிவு சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.
அதன்போது, கம்பஹா, ஜா-எல, மினுவங்கொட மற்றும் ஏகல ஆகிய இடங்களைச் சேர்ந்த 33, 34, 45 மற்றும் 46 வயதுடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விரிவான விசாரணை
தேரர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விரிவான விசாரணைகளுக்குப் பிறகு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் தேரர் பராமரித்து வந்தே கணக்கிலிருந்தே இவ்வாறு பணம் மோசடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சந்தேக நபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
