இறுக்கப்படும் ராஜபக்சர்கள் : யோஷிதவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) மகன் யோஷித ராஜபக்ச (Yoshitha Rajapaksa) மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
சுமார் 73 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியதாகக் கூறப்படும் யோஷித மற்றும் அவரது பாட்டிக்கு எதிரான வழக்கை மீண்டும் ஒக்டோபர் மாதம் விசாரணைக்கு அழைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (22) குறித்த வழக்கு அழைக்கப்பட்டபோது பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்கள்.
சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல்
பின்னர் வழக்கை ஒக்டோபர் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோர் சுமார் 73 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியதாகக் கூறி, சட்டமா அதிபரால் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
