அசாத்தை வீழ்த்திய பின்னர் சிரியாவில் நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தல்
Syria
Election
By Sumithiran
சிரியாவின் நாடாளுமன்றத் தேர்தல் ஒக்டோபர் 5 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிரிய தலைவர் பஷார் அல்-அசாத் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.
மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள்.
25 ஆண்டுகளாக முடிசூடா மன்னன்
அதாவது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 210 ஆகும், அதில் 140 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், மீதமுள்ள 70 பேர் ஜனாதிபதியால் நேரடியாக நியமிக்கப்படுவார்கள்.
சுமார் 25 ஆண்டுகளாக சிரியாவை வழிநடத்திய அசாத், கடந்த டிசம்பரில் ரஷ்யாவிற்கு தப்பிச் சென்ற நிலையில், 1963 முதல் ஆட்சியில் இருந்த பாத் கட்சி ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
