யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் துப்பாக்கி ரவைகள் மீட்பு
யாழ்ப்பாணம் - மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான புனரமைப்பு பணியின் போது துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
விசேட அதிரடிப்படையினரால் இன்று (22.09.2025) இந்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், ஊர்காவற்றுறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று முன்தினம் (20) T56 ரக துப்பாக்கி ரவைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன.
துப்பாக்கி ரவைகள் மீட்பு
இது தொடர்பான தகவல்கள் ஊர்காவற்றுறை காவல்துறையினருக்கு வழங்கப்பட்டது.
அந்தவகையில், ஊர்காவற்றுறை காவல்துறையினர் நீதிமன்றத்தில் நேற்று (21) துப்பாக்கி ரவைகளை மீட்டெடுப்பதற்கான அனுமதியை கோரி இருந்தனர்.
இந்நிலையில் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நேற்று (21) துப்பாக்கி ரவைகளை மீட்டெடுப்பதற்கான உத்தரவு வழங்கியதற்கமைய இன்று காலை ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
