அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வெளியான நற்செய்தி
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு மற்றும் சீருடை கொடுப்பனவு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, ஒரு வருட தொடர்ச்சியான சேவையை நிறைவு செய்த அறநெறி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கொடுப்பனவு மற்றும் சீருடைக் கொடுப்பனவு அடங்கலான கொடுப்பனவாக ரூபா 7,500/ வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு 2026 ஆம் ஆண்டு முதல் புத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மதங்களைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட அறநெறிப் பாடசாலைகளில் செயற்படுத்தப்படும்.
முடிவுக்கான காரணம்
எந்தவொரு தனிப்பட்ட எதிர்பார்ப்புகளும் இன்றி அறநெறிப் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் சேவையை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதனை ஊக்குவித்தல் மற்றும் அவர்களது தனித்துவ அடையாளத்தை பாதுகாப்பதுடன், சமூகத்தின் நல்லிருப்புக்குத் அத்தியாவசியமான அறநெறிக் கல்வி அபிவிருத்திக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீாரம் வழங்கியது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
