நெருக்கடியில் நாடு - கடன் வாங்குவதற்கு நிபந்தனை விதிக்கும் சிறிலங்கா
srilanka
condition
imf
By Sumithiran
இலங்கை அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்கு இணங்கினால் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடன் பெற அரசாங்கம் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தின் பின் IMFல் இருந்து கடன் பெறுவது பற்றி விவாதித்தீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர்,
“அதாவது... கடன் வாங்குவது அன்றிலிருந்து நடந்து வருகிறது. பலவந்தமாக கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அரசாங்கம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டால் கடன் வாங்க தயாராக இருக்கிறோம். ஆனால் சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள கடுமையான நிபந்தனைகளை ஏற்க நாங்கள் தயாராக இல்லை.” என்று அவர் கூறியுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்