மீண்டும் சரியப் போகும் டொலரின் பெறுமதி
Dollar to Sri Lankan Rupee
Ranil Wickremesinghe
Dollars
By Vanan
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஒப்பந்தம் செய்து கொண்டதன் பின்னர் டொலரின் பெறுமதி வீதம் குறையும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் இன்று (19) முற்பகல் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் இதனைத் தெரிவித்தார்.
ரூபாவை எப்படி நிலைப்படுத்துவது
மேலும் உரையாற்றிய அவர், “ரூபாவை எப்படி நிலைப்படுத்துவது? டொலருடன் ஒப்பிடும் போது ரூபாவின் பெறுமதி 300 ரூபாயில் இருந்து 380 ரூபாயாகவே உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான இந்த ஒப்பந்தத்தை நாங்கள் பெற்றவுடன் அது குறையும், ஆனால் அது 200 ரூபா அல்லது 185 ரூபாவாக குறையாது.
அது படிப்படியாக நடக்க வேண்டும்.
எங்களிடம் பொருளாதார ஸ்திரத்தன்மை காலம் உள்ளது. அதற்கு நான்கு ஆண்டுகள் ஆகும்” என்று அதிபர் கூறினார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி