புலம்பெயர் சமூகம் பணம் அனுப்புவதில் தடுமாற்றம்! வங்கிகளுக்கு காத்திருக்கும் நெருக்கடி
புலம்பெயர் சமூகம் தன்னார்வமாக அனுப்பக்கூடிய நிதி இனிவரும் நாட்களில் வங்கிகளூடாக வரக்கூடிய சந்தர்ப்பங்கள் மட்டுப்படுத்தப்படும் என்கிறார் பொருளாதார ஆய்வாளரும், பல நிறுவனங்களுக்கான முகாமைத்துவ நிதியியல் ஆலோசகருமான குருசுவாமி சுரேந்திரன்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று நாட்டின் தற்கால பொருளாதார நிலைமை தொடர்பில் கருத்து பகிர்கையில் மேற்கண்டவாறு கூறிய அவர், அன்னியச் செலாவணி விடயத்தில் வங்கிகள் 100% சிரமத்தை எதிர்கொள்ளப்போகிறார்கள் எனத் தெரிவித்தார்.
இந்த பொருளாதார மாற்றம் இலங்கை மக்கள் மத்தியில் சாதகமான ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால், பொருளாதாரத்தில் மக்கள் முகங்கொடுத்த பல சிக்கல்கள் ஒரு சுமூகமான நிலைக்கு தொடர்ச்சியாக சென்றுகொண்டிருக்கிறது.
டொலரின் பெறுமதி சரிவடைந்து வருவதை பலர் சாதகமானதாக எண்ணுகிறார்கள். ஆனால், மத்திய வங்கியின் பிணைமுறியில் தான் இவை தங்கி இருக்கின்றது.
சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பல அமைப்புகளிடம் இலங்கை கடன்களை கோரியிருக்கிறது.
ஏற்கனவே இருக்கின்ற கடன் சுமைகளோடு இலங்கை அரசாங்கம் பெறும் கடன்களும் சேருமாக இருந்தால், மீண்டும் ஒரு பொருளாதார சிக்கலை இலங்கை எதிர்கொள்ளக் கூடிய அபாய நிலைமை காணப்படுவதாக அவர் கூறுகிறார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்! 6 நாட்கள் முன்
