விமானம் வெளியேற தடை-இலங்கை மீது ரஷ்யா கடும் குற்றச்சாட்டு
ஒப்பந்தத்தை மீறிய இலங்கை
ரஷ்ய விமான நிறுவனங்களின் விமானங்களை தடுத்து வைக்க மாட்டோம் என கடந்த மார்ச் மாதம் ரஷ்ய விமான சேவை நிறுவனத்திற்கு இலங்கை அதிகாரிகள் உத்தரவாதம் வழங்கிய நிலையில் இலங்கை ஒப்பந்தங்களை மீறியுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரஷ்ய விமானம் தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
ரஷ்ய நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்களை தடுத்து வைக்க மாட்டோம் என இலங்கை தலைவர் ஒருவரின் உறுதிமொழிக்கு அமையவே தாம் இலங்கைக்கு பயணம் செய்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தை தடுத்து வைத்திருப்பது சிக்கல்
இத்தகைய சூழலில் விமானத்தை தடுத்து வைப்பது சிக்கலாக இருப்பதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
191 பயணிகளுடன் மொஸ்கோவிற்கு புறப்படவிருந்த விமானம் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
ஐரிஷ் நிறுவனம் ஒன்றினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விமானம் இதற்கு முன்னர் ஏழு தடவைகள் இலங்கைக்கு வந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
https://ibctamil.com/article/russian-ship-docked-in-colombo-port-1654086116
