ரஷ்யாவின் அணு ஆயுத பயன்பாடு குறித்து அதிபர் புடின் விளக்கம்!
ரஷ்யா உக்ரைன் யுத்தம் உச்சம் பெற்றுள்ள நிலையில் அணு ஆயுத பயன்பாடுகள் தொடர்பான விவாதம் வலுவடைந்துள்ளது.
அணு ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து ரஷ்யா தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் வருடாந்த மனித உரிமைகள் கூட்டத்தொடரில் ரஷ்ய அதிபர் காணொளி மூலம் உரை நிகழ்த்திய போதே இது தொடர்பான விளக்கத்தை அளித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு நிகரான ரஷ்ய அணு ஆயுதங்கள்
ரஷ்யா உக்ரைன் போரானது தொடரும் எனவும், ரஷ்யாவிடம் அதி நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய அணு ஆயுதங்கள் பல உள்ளதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரஷ்யாவின் அதி நவீன அணு ஆயுதங்கள் அமெரிக்காவின் ஆயுதங்களுடன் ஒப்பிடும் அளவிற்கு சக்தி வாய்தவைகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுத பயன்பாடு; புடின் விளக்கம்
ரஷ்யாவினுடைய அணுசக்தி கொள்கையானது, நாட்டினுடைய தற்பாதுகாப்பிற்காக மட்டுமே அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என கூறுவதாக விளக்கமளித்துள்ளார்.
இருப்பினும் ரஷ்யா குறித்த அணு ஆயுதங்களை பயன்படுத்தாது என்றும், ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து ரஷ்யா தீர்மானிக்குக்கும் எனவும் ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார்.