உக்ரைனின் முக்கிய நகரொன்றை கைப்பற்றியது ரஷ்யா- உறுதிப்படுத்தியது பிரித்தானிய உளவுத்துறை
உக்ரைனின் போர் மூலோபாய நகர் ரஷ்யா வசம்
உக்ரைனின் போர் மூலோபாய நகரான லைமன் நகரை ரஷ்ய படைகள் தங்களது முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதை ரஷ்ய மற்றும் பிரித்தானிய பாதுகாப்பு உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளன.
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட உளவுத் துறை அறிக்கையில், வடக்கு டொனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள உக்ரைனின் மூலோபாய நகரான லைமனின் பெரும்பாலான பகுதிகளை ரஷ்ய படைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளன, இவை டான்பாஸ் தாக்குதல் நகர்வை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல ரஷ்யாவிற்கு உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
Latest Defence Intelligence update on the situation in Ukraine - 28 May 2022
— Ministry of Defence ?? (@DefenceHQ) May 28, 2022
Find out more about the UK government's response: https://t.co/SNyBZINIl2
?? #StandWithUkraine ?? pic.twitter.com/XzTbIJ8R1J
பிரித்தானிய உளவுத்துறை
ஏனென்றால், லைமன் முற்றுகை என்பது சிவர்ஸ்கி டோனெட்ஸ் நதியை (Siverskyy Donets River) கையாளுவதற்கான முக்கிய ரயில் மற்றும் சாலை பாலங்களை ரஷ்ய படைகளுக்கு வழங்குகிறது என பிரித்தானிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த ரயில் மற்றும் சாலை பாலங்கள் டொனெட்ஸ்க் மாகாணத்தின் உள்நிலையில் உள்ள ஸ்லோவியன்ஸ்க் மற்றும் கிராமடோர்ஸ்க் நகரங்களை கைப்பற்றுவதற்கான வாய்ப்பை பெற்றுத் தருகின்றன எனத் தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது சிவெரோடோனெட்ஸ்க் (Sieverodonetsk)நகரில் இருந்து கிழக்கு நோக்கி 40 கிமீ தொலைவில் ரஷ்ய படைகள் இருப்பதாகவும், லைமன் கைப்பற்றல் டான்பாஸை முழுவதுமாக கைப்பற்றும் ரஷ்யாவின் திட்டத்தின் அடுத்த நகர்விற்கு பெரிதும் உதவியாக இருக்கும் எனவும் பிரித்தானிய உளவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
