எரிபொருளுக்கான புதிய விலை! இலங்கை வர்த்தகத்தில் உள்நுழையும் அமெரிக்கா
வர்த்தக முறுகளை குறைப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கைக்கு எரிபொருள் விற்பனையைத் தொடங்கும் முயற்சியில், அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது.
அதன்படி கச்சா எண்ணெயின் மாதிரிகளை இங்கு நம்பகத்தன்மைக்காக சோதிக்க அமெரிக்கா அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா தனது சந்தையில் நுழையும் இலங்கைப் பொருட்கள் மீது 30 சதவீத வரிகளை விதித்துள்ளது.
கச்சாயெண்ணை இறக்குமதி
எனினும், இலங்கை தற்போது தனக்கு சாதகமாக இருக்கும் வர்த்தக இடைவெளியைக் குறைக்க நடவடிக்கை எடுத்தால், அதை மேலும் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு ஓகஸ்ட் 1 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கச்சாயெண்ணையின் இறக்குமதி மற்றும் உற்பத்தி செலவு குறைந்ததாக இருக்குமாயின் அமெரிக்காவிலிருந்து எரிபொருள் வாங்குவதாக இலங்கை முன்மொழிந்தது.
இதன் பின்னர், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் WTC கச்சா எண்ணெயின் மாதிரிகளை இலங்கை கோரியிருந்தது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
இது தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஏ. ராஜகருணா, மாதிரிகள் அனுப்பப்ட்டுள்ளதாகவும், ஆனால் இலங்கையை அடைய இரண்டு வாரங்கள் அல்லது அதற்கு மேல் ஆகும் என்றும் கூறியுள்ளார்.
எனவே, புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்கு முன்னர், அமெரிக்காவுடனான எரிபொருள் வர்த்தகம் குறித்து இலங்கை எந்த முடிவையும் உறுதியாக எடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
