கிளிநொச்சி பல்கலை வளாகத்தில் இருந்து சடலமொன்று மீட்பு
Kilinochchi
University of Jaffna
Sri Lanka Police Investigation
Education
By Thulsi
கிளிநொச்சி (Kilinochchi) அறிவியல் நகர் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக விவசாயக் பீட வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த தர்மசீலன் ரகுராஜ் 34 வயதுடைய காவலரே இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளார்.
தவறி விழுந்து மரணம்
குறித்த பாதுகாவலர் விவசாய பீடத்தின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம் ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக கிளிநாச்சி மாவட்ட தடவியல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டதின் பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஒப்படைப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி