ஜப்பானில் அதிகரிக்கும் சுனாமி அலைகள்! NHK விசேட வேர்ல்ட் அறிக்கை
புதிய இணைப்பு
வடகிழக்கு ஜப்பானில் உள்ள குஜி துறைமுகத்தில் சுனாமி அலைகள் 1.3 மீட்டர் உயரத்தை எட்டியதாக போர் மற்றும் அமைதி குறித்த இந்த வலைத்தளமான NHK வேர்ல்ட் தெரிவித்துள்ளது.
நெமுரோ ஹனசாகியில் 80 செ.மீ. மற்றும் இஷினோமாகி துறைமுகத்தில் 70 செ.மீ. அலைகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஜப்பானின் பிற இடங்களில் அலைகளின் உயரம் படிப்படியாக அதிகரித்து 50 மற்றும் 60 செ.மீ ஆக உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இன்று காலை 20 செ.மீ ஆக இருந்தது. ஜப்பானிய அதிகாரிகள், அலைகள் 3 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும் என்றும், அடுத்த 24 மணி நேரத்திற்கு சுனாமி எச்சரிக்கை நீடிக்கக்கூடும் என்றும் குடியிருப்பாளர்களை எச்சரித்தனர்.
முதலாம் இணைப்பு
ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வின் காரணமாக, ஜப்பானின் ஹொக்கைடோ (Hokkaido) பகுதியை சுனாமி பேரலை தாக்கியுள்ளது.
அந்நாட்டு நேரப்படி, மு.ப 10.30 க்கு ஆழிப்பேரலை தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 04 மீற்றர் உயரத்துக்கு அலைகள் மேலெழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடருந்து சேவைகள் தடை
ஜப்பானில் ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக தொடருந்து சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Our partners @NWS_NTWC National Tsunami Warning Center have issued warnings and alerts for several coastal Alaska areas following the magnitude 8.7 earthquake in Kamchatka. Please be aware and follow tsunami evacuation guidance! pic.twitter.com/FYPrdUTYKl
— Alaska Earthquake Center (@AKearthquake) July 30, 2025
ஜப்பானின் டோகைடோ (Tokaido), ஜோபன் (Joban) உள்ளிட்ட தொடருந்து மார்க்கத்தில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து ஃபுகுஷிமா டாய்ச்சி மற்றும் ஃபுகுஷிமா அணுமின் நிலையங்களில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருப்பதாக டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி (டெப்கோ) கூறியுள்ளது.
அமெரிக்காவுக்கு சுனாமி எச்சரிக்கை
முன்னதாக, ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் 8.8 என்கிற அளவுக்கு மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால், ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு கம்சட்கா தீபகற்பத்தில் 13 அடி உயர சுனாமி அலைகள் தாக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
