ரஷ்யா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் மர்ம வெடிவிபத்து(காணொளி)
ரஷ்யாவுக்குச் சொந்தமான முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் தீப்பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
மர்ம வெடிவிபத்து ரஷ்யாவில், Angarsk என்னும் இடத்தில் அமைந்துள்ள முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.
அந்த விபத்தில், எண்ணெய் ஏற்றிச் செல்லும் ரயில் ஒன்று தீப்பற்றி கரும்புகையுடன் எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
தீ கபளீகரம்

உக்ரைன் போர் ஆரம்பித்ததால் ரஷ்யாவில் இதுபோல பலமுறை மர்மமான முறையில் வெடிவிபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.
இது உக்ரைன் போருக்கு இடையூறு செய்வதற்காக நாசகாரர்கள் மேற்கொண்டுவரும் சதிவேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
4,300 சதுர அடி அளவிலான இடத்தை தீ கபளீகரம் செய்த நிலையில், தீயை அணைக்க 35 தீயணைப்பு வீரர்கள் போராடவேண்டியிருந்திருததாக கூறப்படுகிறது. இந்த மர்ம வெடிவிபத்து தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசு தரப்பு செய்திகள் முலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Good morning ☀️
— Maria Drutska ?? (@maria_drutska) January 21, 2023
Fuel and gasoline tankers are burning in Siberia, Angarsk, which were planned to be sent to the occupying forces.
Guys, stop smoking, it’s bad for you.
Ooor.. keep smoking, it’s good for Ukraine. pic.twitter.com/fF9mDpW9jq