உக்ரைன் நடத்திய வரலாறு காணாத தாக்குதல் - கடலுக்குள் சரிந்த கிரிமியா பாலம்: பதிலடி கொடுத்த ரஷ்யா
ரஷ்யாவையும் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்தையும் இணைக்கும் மிக முக்கியமான கெர்ச் பாலத்தின் (Kerch Bridge / Crimean Bridge) ஒரு பகுதி உக்ரைன் படைகள் நடத்திய வரலாறு காணாத ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் இடிந்து கடலுக்குள் விழுந்துள்ளது.
இதற்குப் பதிலடியாக, உக்ரைன் தலைநகர் கீவில் (Kyiv) டினிப்ரோ (Dnipro) ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள இரண்டு முக்கியப் பாலங்கள் மீது ரஷ்யப் படைகள் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
பல வாரங்களாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை முன்னெப்போதும் இல்லாத ஒரு நடவடிக்கை என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிகாரிகள்
உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்டுள்ள காட்சிகளில், கிரிமியா பாலத்தின் வளைவுப் பகுதி (Arch section) மற்றும் சாலைப் பாலத்தின் ஒரு பகுதி கடலுக்குள் இடிந்து விழுந்திருப்பது பதிவாகியுள்ளது.

இத்தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட கிரிமியா ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து திங்கட்கிழமை இரவு ரஷ்யப் படைகள் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் கீவ் நகரின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை இணைக்கும் வடக்குப் பாலம் (Northern Bridge) மற்றும் தெற்குப் பாலம் (Southern Bridge) ஆகிய இரண்டு முக்கியப் பாலங்கள் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலோபாய முக்கியத்துவம்
கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ (Vitali Klitschko) இதனை தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலால் நகரின் சில பகுதிகளில் குடிநீர் மற்றும் வெப்ப விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யப் படைகளுக்கு ஆயுதங்கள் மற்றும் எரிபொருள் விநியோகிப்பதற்கான முக்கியத் தரைவழிப் பாதையாக விளங்கிய கிரிமியா பாலம் கடுமையாகச் சேதமடைந்துள்ளதால் அப்பாலத்தின் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இப்பாலத்தை மீண்டும் கட்டியெழுப்பப் போவதாக ரஷ்யா சூளுரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |