வெனிசுலா ஜனாதிபதி கைதுக்கு எதிராக பொங்கியெழுந்த ரஷ்யா, மற்றும் ஈரான்
வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து, நாடுகடத்தியுள்ள அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மதுரோ சிறைப்பிடிப்பில் அமெரிக்காவின் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு செயலைக் கண்டித்த ரஷ்யா, அமைதியைக் கடைப்பிடிக்குமாறு கோரியுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கைக்கான நியாயப்படுத்துதலை ஏற்றுக்கொள்ள முடியாது. இங்கு கொள்கைரீதியான விரோதம் மேலோங்கியுள்ளது.
மீண்டும் இடதுசாரி - வலதுசாரி மோதல்
மீண்டும் இடதுசாரி - வலதுசாரி மோதலுக்கு அமெரிக்காவின் தாக்குதல் வித்திட்டுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஈரான் வெளியுறவு அமைச்சகமும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து ஈரான் தெரிவிக்கையில்,
தேசிய இறையாண்மை- ஒருமைப்பாட்டை அப்பட்டமாக மீறும் செயல்
"வெனிசுலா மீதான அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல், நாட்டின் தேசிய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை அப்பட்டமாக மீறுவதையும் வன்மையாக ஈரான் கண்டிக்கிறது.

இது ஐ.நா. அவை சாசனத்தின் மீதான கடுமையான மீறல். ஐ.நா. அவையில் உறுப்பினராக உள்ள ஒரு சுதந்திர அரசுக்கு எதிரான அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பின் அப்பட்டமான மீறல். இதன் விளைவுகள் முழு சர்வதேச அமைப்பினையும் பாதிக்கும்" என்று தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |