ஸ்தலத்திலேயே இளைஞனை பலியெடுத்த கோர விபத்து!
ரஷ்ய பெண் ஒருவர் நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோரா விபத்தில் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இளைஞர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததோடு, ரஷ்ய பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
உயிரிழப்பு
காலி அக்மீமன பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த ரஷ்ய பெண் ஒருவர் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீவிர விசாரணை
பாரவூர்தி ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் போதே பாரவூர்தியின் பின்புறம் மகிழுந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
