புடினின் திட்டத்தால் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் அமெரிக்கா
ரஸ்ய(Russia) நிலப்பரப்பின் மீது அமெரிக்க ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடாத்தலாம் என்று கடந்த வாரம் உக்ரைனுக்கு(Ukraine) அமெரிக்கா வழங்கியிருந்த அனுமதி ரஸ்யாவை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
அமெரிக்காவுக்கு(USA) எதிரான சக்திகளுக்கு அனைத்து விதமான ஆயுதங்களையும், ரஸ்யா விநியோகிக்க போவதாக ரஸ்ய தரப்பு அறிவித்தல் விடுத்துள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள அமெரிக்காவின் ஒரு தளம் கூட பாதுகாப்பாக இருக்க முடியாதபடி அனைத்து துணை இராணுவ குழுக்கள் தீவிரவாத அமைப்புக்கள் மேற்குலக தீவிரவாத தேசங்கள் போன்றவற்றுக்கு அனைத்து விதமான ஆயுதங்களை ரஸ்யா வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
1961 ஆம் ஆண்டு கியூபாவில்(Cuba) சோவியத் ரஸ்யா அணுகுண்டுகளை அமெரிக்காவுக்கு எதிராக நிலைநிறுத்தி வைத்து அமெரிக்காவை விரட்டிய பின்னணியில் தான் ரஸ்யாவின் அமெரிக்காவுக்கு எதிரான அச்சுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, அணுவாயுதங்கள் தரித்த நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் 6 போர்கலன்கள் என்று ரஸ்யா தனது கடற்படைபிரிவொன்றை அமெரிக்காவின் எல்லைக்குள் அனுப்பியு்ளளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இந்த உண்மையின் தரிசனம்....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |