ஜெலன்ஸ்கியை தாக்காமல் அனுப்பிய ட்ரம்ப்: பேரானந்த்தில் ரஷ்யா!
உக்ரைன் ஜனாதிபதி விளோடிமிர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாக்காமல் அனுப்பி வைத்ததே பெரிய விடயம் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையில் நேற்றையதினம், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கும் இடம்பெற்ற கலந்துரையாடல் மோதலில் முடிந்தமை சர்வதேச அளவில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அதன்போது, ரஷ்ய - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை மற்றும் அமெரிக்காவுடன் கனிமங்கள் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திடவும் ஜெலன்ஸ்கி அமெரிக்காவிற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.
மோதல்
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் பதிவிட்ட கருத்துடன் இந்த மோதல் நிலைமை உருவாகியது.
இருப்பினும், உக்ரைன் ஜனாதிபதி உண்மைகளை தெளிவுபடுத்த முயன்ற போதிலும், ஜனாதிபதி ட்ரம்ப், "எனக்கு அறிவுரை கூற உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை" என்று கூறி, அவரை உண்மைகளை தெளிவுபடுத்த அனுமதிக்கவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில், ஜெலென்ஸ்கி மற்றும் அவருடன் வந்த உக்ரேனிய தூதுக்குழு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினர்.
வரலாற்றுச் சிறப்பு
இந்த நிலையில், குறித்த விடயம் கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா ஜகோரோவா, “ஜெலன்ஸ்கியை அமெரிக்க ஜனாதிபதி தாக்காமல் விட்டதே பெரிய விடயம் என்றும், அவர் பொறுமையை கடைபிடித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜெலென்ஸ்கியின் அனைத்து பொய்களிலும் மிகப்பெரிய பொய், 2022 இல் கியேவ் ஆட்சி தனியாக இருந்தது, ஆதரவு இல்லாமல் இருந்தது என்று வெள்ளை மாளிகையில் அவர் கூறியதுதான்" என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு, ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கிரில் ட்மிட்ரிவ், ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கிக்கு இடையிலான இந்த சூடான மோதல் "வரலாற்றுச் சிறப்பு" என்றும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 3 நாட்கள் முன்
