உக்ரைன் எல்லைக்கு தாக்குதல் ஹெலிகளை அனுப்பியது ரஷ்யா - அதிகரிக்கும் போர்பதற்றம் (photos)
russia
ukraine
war
tension
helicopters
By Sumithiran
தனது போர் ஹெலிகொப்டர்கள் குழுவை உக்ரைன் எல்லைக்கு ரஷ்யா அனுப்பியுள்ளதாகவும், இதனால் ரஷ்ய படையெடுப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்கு பெல்கோரோட் பகுதியில் ரஷ்ய போர் ஹெலிகொப்டர் பறப்பதை வீடியோ காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன.
2014 ஆம் ஆண்டு கிரிமியன் தீபகற்பத்தை ஆக்கிரமிக்க ரஷ்யா தாக்குதலை நடத்தியபோது, மேற்கு பெல்கொரோட் பகுதியில் இதேபோன்ற தாக்குதல் ஹெலிகொப்டர்கள் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கமோவ் கேஏ52, எம்ஐ8எஸ் மற்றும் எம்ஐ24 போர் ஹெலிகொப்டர்கள் மேற்கு ரஷ்யாவின் பல்வேறு இடங்களில் பறக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


