உக்ரைன் போரில் திடீர் திருப்பம் -கெர்சன் நகரிலிருந்து ரஷ்ய படை வெளியேற்றம்
உக்ரைனின் கெர்சன் பகுதியில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மேற்குக் கரையில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி நேர்காணலில் கருத்து தெரிவித்த , ஜெனரல் செர்ஜி சுரோவிகின், கெர்சன் நகரம் மற்றும் மேற்குக் கரையின் பிற பகுதிகளுக்கு விநியோகத்தை வழங்குவது இனி சாத்தியமில்லை என்றார்.
வீரர்களை காப்பாற்றுவது முக்கியம்
"நாங்கள் எங்கள் வீரர்களின் உயிரையும் எங்கள் படைப் பிரிவுகளின் சண்டை திறனையும் காப்பாற்ற வேண்டும். "அவர்களை வலது (மேற்கு) கரையில் வைத்திருப்பது பயனற்றது. "அவற்றில் சிலவற்றை மற்ற முனைகளில் பயன்படுத்தலாம்."எனத் தெரிவித்தார்.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு இதற்கு பதிலளித்தார்: "உங்கள் முடிவுகளையும் முன்மொழிவுகளையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். "படைகளை திரும்பப் பெறுவதைத் தொடரவும் மற்றும் ஆற்றின் குறுக்கே படைகளை மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும்." அவர் பணித்தார்.
படை பின்வாங்கல் - வாயே திறக்காத புடின்
இதனிடையே மொஸ்கோவில் நடைபெற்ற வால்டாய் டிஸ்கஷன் கிளப்பின் 19வது ஆண்டு கூட்டத்தில் விளாடிமிர் புடின் உரை நிகழ்த்தினார். படையினர் முக்கியமான நகரத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டதால் ரஷ்யா பெரும் பின்னடைவைச் சந்தித்தது - ஆனால் புடின் 'அதைப் பற்றி பேசவில்லை.
இந்த அறிவிப்பு ரஷ்யாவின் மிக முக்கியமான பின்வாங்கல்களில் ஒன்றாகும்.
