ஏவுகணை மையத்தில் சந்திக்கும் புடின் - கிம் ஜோங் உன் : கசிந்த தகவல்
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இற்கும் ரஷ்ய அதிபர் விளடிமிர் புடினுக்கும் இடையில் சந்திப்பு மற்றும் பேச்சு ஏற்படாலாம் என தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.
இந்த ரகசிய சந்திப்பானது நாளை(13) ரஷ்யாவின் வோஸ்டோச்னி விண்வெளி மையத்தில்(சோவியத் காலத்து ஏவுகணை தளம்) இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
கொரிய வளைகுடாவில் ஏற்பட்ட பதற்றங்களுடன் வடகொரியா உருவாகி 75ஆவது ஆண்டு நிறைவடைந்த நிலையில், கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இன்று(12) தரைவழியாக ரஷ்யாவுக்குள் பயணிக்கும் காட்சிகள் ஊடகங்களில் பகிரங்கப்படுத்தபட்டிருந்தன.
சந்திப்பு
கிம் ஜோங் உன்னின் இந்தப் பயணத்தின் போது தொடருந்து ஒன்று ரஷ்ய இயந்திரங்களால் இழுத்து செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யா வட கொரியாவில் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து புடினுடன் அவர் ஆலோசிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான இந்த சந்திப்பு எப்போது எங்கு இடம்பெறும் என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.
எனினும் விளாடிமிர் புடின் வோஸ்டோச்னி பகுதியில் உள்ள விண்வெளி மையத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளதால் அங்கு இந்த சந்திப்பு இடம்பெறலாம் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு ரஷ்யாவின் முக்கிய நகரங்களிலிருந்து வெகு தூரத்தில் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த தளம் சோவியத் காலத்து ஏவுகணைத் தளமாக இருந்தது.எனினும் கடந்த 2019 முதல், இந்த மையத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த் மிக முக்கியமான கட்டுமானத் திட்டமாக புட்டின் உருவாக்கியுள்ளார்.
