போரில் வெற்றி பெற பிரித்தானியாவுடன் ஒப்பந்தம் - உக்ரைன் அதிரடி நகர்வு
போர்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்குடனான விவாதத்துக்குப்பின் போரில் வெற்றியை அடைய முயற்சிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஜெலன்ஸ்கி ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்குடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் இருவரும் விவாதித்ததாகவும்,
இந்த ஆண்டில் வெற்றியை அடைவதற்காக முயற்சிகளை தீவிரமாக்க இருவரும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அது தொடர்பில் திடமான முடிவுகளை எடுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
வெடிகுண்டுகள் வழங்குவதற்கு பணம்
பிரித்தானியர்கள் கருத்து அந்த ட்வீட் வெளியானதுமே, சொந்த நாட்டில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லை, நோயாளிகள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், வெடிகுண்டுகள் வழங்குவதற்கு பிரித்தானிய பிரதமர் ரிஷிக்கு பணம் இருக்கிறது, அவமானம், என்னும் தொனியில் பிரித்தானியர்கள் அந்த ட்வீட்டுக்கு பதிலளித்துக்கொண்டிருக்கிறார்கள்!
Together with ?? Prime Minister @RishiSunak, we discussed further defense cooperation. We agreed to intensify our efforts to bring victory closer this year already. We already have concrete decisions for this.
— Володимир Зеленський (@ZelenskyyUa) January 3, 2023
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
