ரஷ்யாவை ஓடவைத்த உக்ரைன்..! கடும் தொனியில் புடின் மிரட்டல்
உக்ரைனின் பதில் தாக்குதல்
உக்ரைனின் பதில் தாக்குதல்கள் ரஷ்யாவின் திட்டங்களை மாற்றாது என ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்ய படையினர் வசமிருந்த பல பகுதிகளை உக்ரைன் படையினர் மீளக் கைப்பற்றியமை தொடர்பில் முதல் முறையாக விளாடிமீர் புடின் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.
வட கிழக்கிலுள்ள கார்கீவ் பிராந்தியத்தில் கடந்த ஆறு நாட்களில் 08 ஆயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பளவை உக்ரைனிய படையினர் கைப்பற்றியுள்ளனர்.
புடினின் பதில்
எனினும் தாம் எந்தவொரு விடயத்திலும் அவசரம் காட்டப் போவதில்லை எனவும், டொன்பாஸ் பிராந்தியத்தில் தமது படையினரின் தாக்குதல்கள் முன்னோக்கி செல்வதாகவும் விளாடிமீர் புடின் கூறியுள்ளார்.
டென்பாஸ் பிராந்தியத்தை துரித கதியில் கைப்பற்றாத போதிலும், படிப்படியாக குறித்த பிராந்தியத்தில் உள்ள பகுதிகளை கைப்பற்றி வருவதாகவும் ரஷ்ய அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ரஷ்யா, தனது முழுமையான படைப்பலத்தை இதுவரை பயன்படுத்தவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனின் தாக்குதல்கள் தொடருமாயின் மிகவும் தீவிரமான பதில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் மேலும் எச்சரித்துள்ளார்.
