ரஷ்ய இராணுவக் கட்டமைப்பிற்குள் பெலாரஸ் படை? உண்மையை வெளியிட்ட அதிபர்!
attack
russia
army
ukraine
belarus
By Kalaimathy
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரில், ரஷ்ய இராணுவத்துடன் சேர பெலாரஸுக்கு எந்த திட்டமும் இல்லை என்று பெலாரஷ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார் என பெலாரஷ் அரச செய்தி நிறுவனமான பெல்டா தெரிவித்துள்ளது.
பெலாரஸின் பிரதேசத்தில் இருந்து ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனைத் தாக்குகின்றன என்ற கீவ்வின் குற்றச்சாட்டையும் லுகாஷென்கோ மறுத்துள்ளார் என்றும் பெல்டா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை உக்ரைனின் முக்கிய தென்கிழக்கு துறைமுக நகரம் தொடர்ந்து ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதோடு, பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் மற்றும் உள்கட்டமைப்பு சேதமாகியுள்ளதாகவும் மரியுபோல் மேயர் வாடிம் போய்ச்சென்கோ தெரிவித்துள்ளார்.
