ரஷ்ய - உக்ரைன் மோதல் விவகாரம்! பைடன் - மக்ரன் நேரில் சந்திப்பு
ரஷ்ய - உக்ரைன் யுத்தத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரன் நேரில் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
இம்மானுவேல் மக்ரன் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
உக்ரைன் விவகாரம்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரன், இன்று செவ்வாய்க்கிழமை மாலை தனி விமானத்தில் அமெரிக்கா பயணித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அங்கு தங்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஜோ பைடனுடன் அவர் உரையாடவுள்ளார்.
அதேவேளை, ரஷ்யா - உக்ரைன் யுத்தத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்தும் இருவரும் கலந்தாலோசிக்கவுள்ளனர்.
அதிபர் மக்ரன் அமெரிக்கா செல்வது இது இரண்டாவது தடவையாகும்.
முன்னதாக தனது முந்தைய ஐந்தாண்டு கால ஆட்சியின் போது மக்ரன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.