வலுக்கும் ரஷ்யப்போர்: எட்டு வருடங்களின் பின் உக்ரைன் வசமான முக்கிய பகுதி
கருங்கடலில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த போய்கோ கோபுரங்களை உக்ரைன் தற்போது தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
கிட்டத்தட்ட 19 மாதங்களாக உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடைபெற்று வரும் நிலையில், ஆரம்ப கட்டங்களில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அத்துடன் உக்ரைனின் தென்கிழக்கு பகுதியின் 4 முக்கிய பிராந்தியங்களை தங்கள் நாட்டின் ஒற்றை அங்கமாகவும் ரஷ்யா அறிவித்தது.
எதிர் தாக்குதல்
எனினும் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் வைத்து இருந்த பல பகுதிகளை உக்ரைனிய படைகள் தற்போது எதிர் தாக்குதல் நடத்தி மீண்டும் கைப்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கருங்கடலில் 2015 ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த போய்கோ கோபுரங்களை(Boiko tower) தற்போது உக்ரைன் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த போய்க்கோ கோபுரங்கள் அமைந்துள்ள பிரதேசம் எரிவாயு உற்பத்திக்கு பிரசி்த்தி பெற்றதாக இடமாக கருதப்படுகிறது.