உக்ரைனை பழிவாங்கிய ரஷ்யா..!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் படிப்படியாக அந்த நாட்டையே சூழ்ந்து வருவதாக உக்ரைனிய அதிபர் எச்சரித்த நிலையில் உக்ரைன் மீதான ஏவுகணைத் தாக்குதல்களை ரஷ்யா இன்று தீவிரப்படுத்தியால் உயிர் உடமை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவை குறிவைத்து அண்மைய நாட்களில் தொடர்ச்சியான தாக்குதல்கள் இடம்பெற்றுவரும், நிலையில் நேற்றும் மூன்று ஆளில்லா வான்கலங்கள் மொஸ்கோவை தாக்க முனைந்திருந்தன.
பதில் தாக்குல்

இந்த தாக்குல்களுக்குரிய பதிலடியாக இன்று உக்ரைனின் மத்திய பிராந்தியத்தில் உள்ள கிறிவி ரிஹ் நகர் மீது ரஷ்யா கடுமையான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல்களின் நான்கு பேர் பலியாகியுள்ளதுடன், 43 பேர் காயமடைந்துள்ளனர்.
ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த இரண்டு கட்டிடங்களில் இருந்து மக்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
மொஸ்கோ தாக்குதல்

நேற்று மொஸ்கோ நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு வணிக கட்டடம் பாதிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
50 மாடி கட்டிடத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது தளத்தில் ஆளில்லா வான்கலங்கள் மோதி வெடித்தாகவும் கூறப்பட்டுள்ளது.