அதிகரிக்கும் ரஷ்யாவின் கொடூர செயல்கள்: ஆய்வில் வெளியான தகவல்
ரஷ்ய அதிகாரிகளால் காவல் மையங்களில் மக்களை கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளதாகவும் சில பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொடுமைகளால் உயிர்பலிகளும் ஏற்படுவதாக உக்ரைனில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் எரிக் மோஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்திற்கு தெரிவயந்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான யுத்தம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்று வருகிறது.
இதன் போது உக்ரைனின் சில பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அங்கு ரஷ்யா மேற்கொண்டு வரும் கொடுமைகளால், மக்கள் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கொடுமைப்படுத்தும் சம்பவங்கள்
அத்தோடு உக்ரைனில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டு இருக்கும் விசாரணை ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய ஆயுதப்படை மேற்கொண்டு வரும் கொடுமைகள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து வருவதாக ஆணையத்தின் தலைவர் எரிக் மோஸ் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஆய்வுகளின் போது ரஷ்ய அதிகாரிகளால் நடத்தப்படும் காவல் மையங்களில் கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
அதேவேளை இது தொடர்பான குற்றச்சாட்டுகளை ரஸ்யா முற்றாக மறுத்துள்ளதாகவும் இவ் விடயம் குறித்து ஆணையத்தில் பதில் அளிக்க ரஷ்யாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்த போதும் ரஷ்யா தரப்பில் அதிகாரிகள் யாரும் ஆணையத்தில் முன்னிலையாகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.