பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்காவில் சாதனை!
உலகில் பல அதிசயங்கள் நாளாந்தம் நடந்த வண்ணம் உள்ளன அந்தவகையில் பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மனிதனுடைய இதயத்தை அறுவைசிகிச்சை மூலம் மாற்றுவதை கேள்விப்பட்டிருக்கின்றோம் ஆனால் பன்றியின் இதயத்தை இறக்கும் நிலையில் இருந்த நபர் ஒருவருக்கு பொருத்தி அவரது உயிரை காப்பாற்றி உள்ளனர்.
மேலும் இச் சம்பவம் உலகில் இரண்டாவது முறையாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அறுவை சிகிச்சை பெற்ற நோயாளி இரண்டு நாட்களுக்கு பின் மகிழ்ச்சியாக பேசினார் என மேரிலாந்து மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதய செயலிழப்பு
அமெரிக்காவில் மேரிலாந்தில் வசிக்கும் முன்னாள் கடற்படை வீரருக்கு இதய செயலிழப்பு ஏற்ப்பட்டுள்ளது. இவரது உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மனிதர்களின் இதயத்தை பொருத்த முடியாத நிலையில் பன்றியின் இதயத்தில் சில மாற்றங்களை செய்து அதனை அவருக்கு பொருத்தியுள்ளனர்.
குறித்த அறுவை சிகிச்சையில் நல்ல முன்னேற்றங்கள் தெரிவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
முதல் அறுவை சிகிச்சை
கடந்த ஆண்டு குறித்த மருத்துவ குழு இறக்கும் நிலையில் இருந்த டேவிட் பென்னட் என்பருக்கு பன்றியின் இதயத்தை பொருத்தியது எனினும் அவர் இரண்டு மாதங்கள் மட்டுமே உயிருடன் இருந்தார்.
வைரஸ் தொற்று காரணமாகவே குறித்த அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததாகவும் இம்முறை வைரஸ் தொற்றுக்கு எதிரான மருத்துவ ஆய்வுகள் முழுமையடைந்ததில், தற்போது இரண்டாவது பன்றி இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் சில மருந்து மாற்றங்களையும் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த முறை முந்தைய நோயாளியைப் போல மரணம் அடையும் அளவுக்கு குறித்த நோயாளியின் உடல்நிலை மோசமடையவில்லை.
எனவே அறுவை சிகிச்சை வெற்றி பெறும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.