ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் இருவர் பலி! இரங்கல் தெரிவித்த ஜெலென்ஸ்கி
ரஷ்யா - உக்ரைன் போர் இடம்பெற்று வரும் நிலையில் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் இருவர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் வடகிழக்கு நகரமான சுமியில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைனின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரங்கல் தெரிவித்த ரஷ்ய அதிபர்

ரஷ்ய ஏவுகணை தாக்கிய சுமியில் இருந்த இடிபாடுகள் மாலையில் தான் அகற்றப்பட்டன.
பயங்கரவாதிகள் நகரின் கல்வி நிறுவனம் ஒன்றை தாக்கியுள்ளனர், இதில் இருவர் கொல்லப்பட்டனர்.
''உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கல்'' என அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
இந்த தாக்குதலில் 20 பேர் காயமடைந்துள்ளதுடன், கல்வி நிறுவன கட்டிடம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 7 மணி நேரம் முன்