வலுவடையும் உக்ரைன் - ரஷ்யாவுக்கு பகிரங்க எச்சரிக்கை
ரஷ்யாவின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
தலைநகர் மொஸ்கோ மீதான ஆளில்லா விமானத் தாக்குதலை தொடர்ந்து அவர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.
ரஷ்யா மீதான தாக்குதல்

போரானது படிப்படியாக ரஷ்யாவின் எல்லை, அதன் அடையாள மையங்கள், இராணுவ தளங்கள் வரை விரிவடைந்து வருகின்றது.
ரஷ்யா மீதான தாக்குதல்கள், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போரில் தவிர்க்க முடியாத, இயற்கையான மற்றும் முற்றிலும் நியாயமான செயன்முறை என அவர் கூறியுள்ளார்.
உக்ரைனின் மூன்று ஆளில்லா விமானங்களை சுட்டுவீழ்த்தியதாகவும் இரண்டு கட்டடங்கள் மீது மோதியதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு கூறியிருந்தது.
இந்த தாக்குதல்கள் காரணமாக நகரின் தென்மேற்கே உள்ள விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
வலுவடையும் உக்ரைன்

இந்த தாக்குதலுக்கு உக்ரைனே காரணம் என மொஸ்கோ குற்றஞ்சாட்டியிருந்த பின்னணியில் வொலெடிமீர் ஷெலென்ஸ்கியின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
தமது நாட்டிற்கு எதிரான ரஷ்யாவின் படை நடவடிக்கையில் உக்ரைனின் கரங்கள் வலுவடைந்து வருவதாகவும் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.