நாட்டுப் பற்றை வெளிப்படுத்திய சிறுவன்: உக்ரைன் ராணுவ வீரரின் நெகிழ்ச்சி செயல்
போர் மூண்டுள்ள உக்ரைன் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவன் தினமும் உக்ரைன் நாட்டு ராணுவ உலங்குவானூர்திகளை பார்த்து கை அசைக்கும் காணொளி வெளியாகியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகின்ற நிலையில் கையில், உக்ரைன் நாட்டு தேசிய கொடியுடன் சிறுவன் ஒருவன் தினமும் உக்ரைன் ராணுவ உலங்குவானூர்திகளை பார்த்து கொடியசைப்பதை ராணுவ விமானி ஒருவர் கவனித்துள்ளார்.
இந்நிலையில் சிறுவனின் தேச பக்தியை பாராட்ட அந்த ராணுவ விமானி முடிவு செய்துள்ளார்.
இராணுவ பணி
இதையடுத்து வழக்கமான இராணுவ பணிகளுக்கு இடையில் சிறுவன் கொடியுடன் நிற்பதை பார்த்த விமானி உடனே தனது உலங்குவானூர்தியை தரையிறக்கியுள்ளார்.
சிறுவனிடம் ஓடிச் சென்ற விமானி, அவனிடம் நிவாரண பொருட்களுடன் மிட்டாய், பொம்மை மற்றும் உணவு உள்ளிட்டவை அடங்கிய பரிசு பெட்டகத்தை வழங்கியுள்ளார்.
சிறுவனின் தேச பக்தியை வெகுவாக பாராட்டிய விமானி, அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றதுடன் இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |