அணு ஆயுதப் போர் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை; கடல் ராஜாவை உடனடியாக அனுப்பும் பிரித்தானியா!
உக்ரைன் உடனான போரில் தோல்வியை தழுவும் நிலை ஏற்பட்டால் ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்தலாம் என்று இத்தாலிய பாதுகாப்பு துறை அமைச்சர் கைடோ குரோசெட்டோ எச்சரித்துள்ளார்.
உக்ரைன் உடனான போர் தாக்குதலில் ரஷ்யா பின்னடைவை தொடர்ந்து சந்தித்து வரும் நிலையில் முக்கிய மூலோபாய நகரான கெர்சனை கூட உக்ரைனிய படைகளிடம் ரஷ்யா சமீபத்தில் இழந்தது.
மண்மீட்பு போரில் கடும் தீவிரம்
அத்துடன் போரின் தொடக்க நாட்களில் ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் அனைத்து பகுதிகளையும் மீட்கும் நோக்கில் கடுமையான எதிர்ப்பு தாக்குதலை உக்ரைனிய படை நடத்தி வருகிறது.
#UK to donate several Sea King helicopters to #Ukrainian Armed Forces
— NEXTA (@nexta_tv) December 28, 2022
The Ukrainian military has already been trained to fly helicopters. pic.twitter.com/88UPrAukJD
இந்நிலையில் உக்ரைனிய படையின் எதிர்ப்பு தாக்குதலுக்கு உதவும் விதமாக பிரித்தானியா தங்களது கடல் ராஜா (Sea King) என அழைக்கப்படும் ஹெலிகாப்டர்களை வழங்கி உதவியுள்ளது.
ரஷ்யா பின்னடைவு
இந்த ஹெலிகாப்டர்களை இயக்குவது தொடர்பான பயிற்சியை ஏற்கனவே உக்ரைனிய படைகள் பெற்றுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரில் ரஷ்யாவிற்கு எதிரான நெருக்கடி அதிகரித்து வரும் இத்தகைய சூழ்நிலையில், ரஷ்யா தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.
அணு ஆயுத எச்சரிக்கை
இதற்கிடையில் உக்ரைன் உடனான போரில் தோல்வியை தழுவும் நிலை ஏற்பட்டால் ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்தலாம் என்று இத்தாலிய பாதுகாப்பு துறை அமைச்சர் கைடோ குரோசெட்டோ (Guido Crosetto) எச்சரித்துள்ளார்.
#Russia will use nuclear weapons in case of defeat in the war, said #Italian Defense Minister Guido Crosetto. pic.twitter.com/QfvYVPOKys
— NEXTA (@nexta_tv) December 28, 2022
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
