உக்கிர போரின் மத்தியிலும் ரஷ்யா உக்ரைன் இடையே இடம்பெற்ற இராணுவ பரிமாற்றம்!
Russo-Ukrainian War
Ukraine
Russian Federation
By Kalaimathy
உக்ரைன் ரஷ்யா இடையே உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரின் மத்தியில் கைதிகள் பரிமாற்றமும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய டொனெட்ஸ்க் எல்லைக் காவல்படை வீரர், மரியுபோல் மரைன் காவல் வீரர் உட்பட கைதிகள் 60 பேரை ரஷ்யா விடுவித்துள்ளது.
பதிலுக்கு ரஷ்ய படையின் 55 போர் கைதிகளை உக்ரைன் விடுவித்துள்ளது. இதன் மூலம் உக்ரைன் மீதான ரஷ்ய போரில் சிறைபிடிக்கப்பட்ட இராணுவ வீரர்களை இரு நாடுகளும் மாற்றிக் கொண்டனர்.
கைதிப் பரிமாற்றம்
அவ்வப்போது கைதிகள் பரிமாற்றம் நிகழ்ந்து வரும் நிலையில், தற்போது உக்ரைன் – ரஷ்யா தலா 60 போர் கைதிகளை விடுவித்துள்ளது.
போர் தொடங்கியதில் இருந்து இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர்க் கைதிகளை இரு நாடுகளும் மாற்றியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்