உயர் துல்லிய தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்ய இராணுவம்
உக்ரைன் தலைநகர் கீவ் மீது உயர் துல்லிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாக ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தலைநகரில் உள்ள உக்ரைனிய இராணுவம், உளவுத்துறை இலக்குகளை தாக்க தயாராகி வருவதாகவும் எனவே அந்த கட்டடங்கள் அருகே வாழும் குடியிருப்புவாசிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரஷ்ய பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில்,
ரஷ்ய படைகள் 'உக்ரைனிய பாதுகாப்பு சேவையின் தொழில்நுட்ப மையங்கள் மற்றும் கீவில் உள்ள 72வது முக்கிய நடவடிக்கை மையத்திற்கு' எதிராக 'உயர் துல்லிய தாக்குதல்" நடத்த தயாராகி வருகின்றன.
எனவே ரஷ்யாவிற்கு எதிராக ஆத்திரமூட்டல்களை மேற்கொள்ள தேசியவாதிகளால் பயன்படுத்தப்படும் உக்ரைனிய குடிமக்களும் தாக்குதல் இலக்கு பகுதிகளுக்கு அருகே வசிக்கும் கீவ் குடியிருப்புவாசிகளும் தங்களுடைய வீட்டை விட்டு வெளியேறுங்கள் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.