900 ஐ கடந்த உக்ரைன் மருத்துவமனை மீதான தாக்குதல் - ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!
உக்ரைனில் உள்ள மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவதை ரஷ்யா உடனடியாக நிறுத்தவேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
உறுப்பு நாடுகள் குறித்த தீர்மானத்துக்கு பெருமளவில் ஆதரவு அளித்துள்ளதுடன், இதற்கு எதிராக ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்தன.
சுகாதாரத்துறை மீதான தாக்குதல்

இதேவேளை, உக்ரைனில் சுகாதார நெருக்கடி தொடர்வது குறித்தும் தீர்மானத்தில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யப் படையெடுப்பு அதற்கு முக்கியமான காரணம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
14 மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்துக்கான உக்ரைனின் தூதுவர் கூறியுள்ளார்.
யுத்தம் தொடங்கியதிலிருந்து இதுவரை உக்ரைனின் சுகாதாரக் கட்டமைப்புக்கள் மீது 900 க்கும் மேற்பட்ட தடவை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்