ரஷ்யாவை அதிரவைத்த எறிகணை தாக்குதல் - வெளியானது வீடியோ
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா பெரும் உயிர், உடமை சேதங்களை நாளாந்தம் ஏற்படுத்தி வருகிறது.
ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் எறிகணை வீச்சுக்களால் உக்ரைன் தினசரி அதிர்ந்த வண்ணம் உள்ளது. மக்கள் தொடர்ந்தும் பாதாள அறைகளில் அச்சத்துடன் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ரஷ்யாவில் அமைந்துள்ள இராணுவ தளம் மீது நடத்தப்பட்ட எறிகணை தாக்குதல் அந்த நாட்டை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உக்ரைனிலிருந்து 12 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்திற்கு அருகில் உள்ள Oktyabrsky என்ற கிராமத்தில் உள்ள இராணுவ முகாம் மீதே இந்த எறிகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த எறிகணை தாக்குதலை பெல்கோரோட் பிராந்தியத்தின் ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் சேத விபரங்களை அவர் வெளியிடவில்லை.
Residents of #Russian city of #Belgorod report an explosion near the village of Oktyabrsky. It is about 12 kilometers to the #Ukrainian border.
— NEXTA (@nexta_tv) March 29, 2022
The governor of Belgorod region, Vyacheslav Gladkov, confirmed information about explosions. He did not specify what exactly happened. pic.twitter.com/zrFzot2JTk
