உக்ரைனில் மற்றுமொரு தளபதியை இழந்தது ரஷ்ய படை
Russo-Ukrainian War
Ukraine
Russia
By Jaso
உக்ரைன் போரில் ரஷ்ய தளபதி ஒருவர் கொல்லப்பட்டார்.லெனின்கிராட் படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிய ரஷ்ய கேணல் எவ்ஜெனி வசுனின் என்ற தளபதியே கொல்லப்பட்டவராவார்.
வசுனின் அவரது குழுவும் தமது படைப்பிரிவில் இணைவதற்காக நகர்ந்துள்ளனர்.அவர்களின் நடமாட்டத்தை உக்ரைனிய இராணுவம் கண்டறிந்ததை அடுத்து மோதல் வெடித்தது.
திடீரென வெடித்த மோதல்

இந்த மோதலின் போது, கேணல் வசுனின் அவரது படைப்பிரிவில் இருந்து "துண்டிக்கப்பட்டார்" . அவர் பலத்த காயமடைந்த நிலையில் இறந்துவிட்டார்.
லெனின்கிராட் ரெஜிமென்ட் முக்கியமாக செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் இருந்து கட்டாயப்படுத்தப்பட்டவர்களால் உருவாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்