“அமெரிக்க நகரங்களை அழிக்கும் அதி நவீன அணு சக்தி ஏவுகணைகள் எங்களிடம் உள்ளன” பகிரங்க மிரட்டல் விடுத்த ரஸ்யா!!
ரஸ்யாவின் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹைப்பர்சோனிக் அணு ஏவுகணைகள் அமெரிக்க நகரங்களை அழிக்கும் திறன் கொண்டவை என்று அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை செய்துள்ளார்.
மாஸ்கோவில் எரிசக்தி மன்றத்தில் உரையாற்றிய ரஸ்ய அதிபர்,
அமெரிக்காவில் உருவாக்கப்பட்டதை விட ஐந்து மடங்கு வேகமாக பறக்கும் ஆயுதத்தை, தனது நாடு உருவாக்கியிருப்பதாக கூறினார்.
அதே நேரத்தில், ரஸ்யா யாருக்கும் தீங்கு செய்ய விரும்பவில்லை என்றும் கூறினார்.
"மேக் 3 ( Mach 3) அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் செல்லும் ஆயுதங்கள் அமெரிக்காவில் உருவாக்கப்படுகின்றன. எங்கள் அமைப்புகள் மேக் 20 -க்கு மேலான வேகத்தில் பறக்கின்றன.
இவை வெறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் அல்ல, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், இவை உங்களிடம் உள்ளதை விட மிக வலிமையான ஆயுதங்கள்" என புடின் குறிப்பிட்டார்.
இத்தகைய நவீன ஆயுத அமைப்புகள் ஏற்கனவே ரஸ்யாவிடம் உள்ளன என்பதோடு இதே போன்ற அமைப்புகள் மற்ற நாடுகளில் உருவாக்கப்பட்டு வருகின்றன, என விளாடிமிர் புடின் அவர் மேலும் கூறினார்.