இலங்கையில் உயிரிழந்த ரஷ்ய விமானி
Sri Lanka
Russia
By Kiruththikan
திடீர் சுகவீனம் காரணமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஷ்ய விமான சேவையின் துணை விமானி நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த விமானி கடந்த பன்னிரண்டாம் திகதி ரஷ்ய விமானத்தில் இலங்கை வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானி இன்று மீண்டும் நாடு செல்ல இருந்த நிலையில், நேற்று ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
எனினும் விமானியின் உயிரிழப்புக்கு காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
