அமெரிக்க கடற்படை நடுவே தனியாக நுழைந்த ரஷ்ய போர்க் கப்பல்
ஈரான் மீது எந்த நேரமும் அமெரிக்கா தாக்குதலை நடத்தலாம் என்ற பரபரப்பு நாளுக்கு நாள் எகிறிய வணணம் இருக்கையில் அமெரிக்காவிற்கு பேரிடியாக அமைந்துள்ளது ரஷ்யாவின் நகர்வு.
அதாவது ஈரான் துறைமுகத்தில் தரித்து நிற்கிறது ரஷ்யாவின் போர்க்கப்பல்.
யுத்தசூழ்நிலைகளுக்கு மத்தியிலும் ஈரான் மற்றும் ரஷ்ய கடற்படையினர் ஒன்றுமே நடக்காதது போல வழமையான கடற்படை பயிற்சியில் ஈடுபட்டனர். அந்தப்பயிற்சி முடிவடைந்த நிலையிலும் தனது நாட்டிற்கு திரும்பிச் செல்லாமல் ஈரான் துறைமுகத்தில் தரித்து நிற்கிறது அந்த ரஷ்ய போர்க்கப்பல்.
இவ்வாறு தரித்து நிற்கும் அந்த போர்க்கப்பல் எப்போது திரும்பிச் செல்லும் என இதுவரை அறிவிக்கப்படவில்லை.எதற்காக அந்தக்கப்பல் நிற்கிறது திரும்பிச் செல்லுமா என்பது கூட தெரியாமலேயே உள்ளது.
போரில் முழுமூச்சாக தயார்படுத்தலில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவிற்கு ரஷ்யாவின் கடற்படை கப்பல் ஈரானில் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை உவப்பான செய்தியாக அமையப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.
அவ்வாறெனில் அடுத்து நடக்கப்போவது என்ன..? இதனை அலசி ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |