உக்ரைனில் கொள்ளையடிக்கும் ரஷ்ய படை - வெளியானது வீடியோ ஆதாரம்
உக்ரைன் மீது படையெடுப்பை மேற்கொண்டுள்ள ரஷ்ய படையினருக்கு சீரான உணவு விநியோகம் இடம்பெறுவதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அவர்கள் மத்தியில் சோர்வான நிலை ஏற்பட்டுள்ளதாக களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு உணவு விநியோகம் சீரின்மையை அடுத்து உக்ரைனில் உள்ள கடைகளில் ரஷ்ய படையினர் பொருட்களை கொள்ளையடித்துச் செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யுத்த தாங்கி ஒன்றில் வரும் ரஷ்ய படையினர் உக்ரைனில் உள்ள கடை ஒன்றுக்குள் திடுதிப்பென நுழைந்து பொருட்களை கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.எனினும் இது எந்தப்பகுதியில் நடைபெற்றது என தெரியவரவில்லை.
இதேவேளை உக்ரைனின் கெர்சன் நகரிலுள்ள கடைக்கு ஆயுதங்களுடன் வரும் ரஷ்ய படையினர்தமக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்கின்றமையும் பதிவாகியுள்ளது.
Russian soldiers in Kherson looting a store. 2/https://t.co/I9DsOemDRh pic.twitter.com/v94pAPLWZa
— Rob Lee (@RALee85) March 21, 2022
Occupiers looting a #Ukrainian store pic.twitter.com/jPKbHLDEeR
— NEXTA (@nexta_tv) February 27, 2022
